×

நாடு முழுவதும் ரூ1.05 லட்சம் கோடியில் மேலும் 10 அணுஉலைகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவையில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு: நாடு முழுவதும் 700 மெகாவாட் திறன் கொண்ட 10 கனரக அணு உலைகள் அமைக்க நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி அனுமதியை அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் கைகா, அரியானாவில் கோரக்பூர், மத்தியப் பிரதேசத்தில் சுட்கா ஆகிய இடங்களில் தலா 700 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள மஹி பன்ஸ்வாராவில் 4 அணு உலைகள் கட்டப்பட உள்ளன.
இந்த அணுஉலைகள் 2031ம் ஆண்டுக்குள் ரூ1,05,000 கோடி செலவில் படிப்படியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுடன் என்பிசிஐஎல் கூட்டு முயற்சியாக அணுசக்தி திட்டங்களை அமைக்க 2015 ம் ஆண்டு அணுசக்தி சட்டத்தை அரசு திருத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

The post நாடு முழுவதும் ரூ1.05 லட்சம் கோடியில் மேலும் 10 அணுஉலைகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union government ,New Delhi ,Minister of State ,Jitendra Singh ,Sabha ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...